வன்னியில் வேட்பாளர் ஒருவர் 16 இலட்சம் வரை செலவு செய்ய முடியும் - தேர்தல் ஆணையம்
நேற்று தேர்தல் செலவினங்களின் வரம்பினை நிர்னயித்து வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 இல 03 எனும் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவு செய்ய முடியுமான செலவு எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரசார செலவினங்கள் அடங்கிய செலவின விபரத் திரட்டுகள் அத்துடன் தேர்தல் பிரசார செலவினங்கள் அடங்கிய செலவின விபரத் திரட்டுகள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 21 நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்படவேண்டும்.
இதன் படி வன்னி தேர்தல் மாவட்டத்திலே ஒரு வேட்பாளர் ஒருவர் 16 இலட்சத்து 73 ஆயிரத்து 243 ரூபா வரை மட்டுமே செலவு செய்ய முடியும். அத்துடன் கட்சி அல்லது சுயேட்சைகுழுவால் 99 இலட்சத்து 13 ஆயிரத்து 965 ரூபாவும், தேசியப்பட்டியல் வேட்பாளர் ஒருவர் 4 ஆயிரத்து 327 ரூபா வரையும் செலவு செய்ய முடியும்.
No comments