ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுவே எமது நிலைப்பாடு - விஜய்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு இன்று மாலை இடம்பெற்றது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு அதிகளவானோர் வருகைதந்திருந்தனர். இதன்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. வெற்றி வாகை என தொடங்கும் இப்பாடலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்பாடலை விஜயுடன் இணைந்து தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். பின்னர் மக்களிடையே உரையாற்றிய விஜய், அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்களின் நிலைப்பாடு என குறிப்பிட்டார். ஆனாலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமீக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் நாம் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் இதன்போது தெரிவித்தார்.
No comments