Breaking News

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண  தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.11.2024) ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (31.10.2024) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் இந்த தீர்மானிம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் (09.11.2024) ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Paid Advertisement 


No comments