பதவியிலிருந்து விலகியதற்கான காரணங்களை வெளிப்படுத்த முடியாது: ஹிருணிகா பிரேமசந்திர
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எனது பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளர் ஏற்காவிட்டாலும், தொடர்ந்தும் இந்த பதவிகளை வகிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் பதவியிலிருந்து விலகியதற்கான காரணங்களை என்னால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள (Colombo) ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எனது பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளர் ஏற்காவிட்டாலும், தொடர்ந்தும் இந்த பதவிகளை வகிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன்.
கட்சியையோ கட்சி தலைவரையோ அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் நோக்கத்தில் நான் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. பொதுத் தேர்தலில் நான் எனக்காக பாடுபட வேண்டியுள்ளது.
எனவே தான் ஏனைய பதவிகளை துறக்க தீர்மானித்தேன். பொதுச் செயலாளர் எனது கடிதத்தை ஏற்காவிட்டாலும், தொடர்ந்தும் இந்த பதவிகளை வகிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன். கட்சி தலைவர் எடுக்கும் தீர்மானங்களை பொதுச் செயலாளர் நடைமுறைப்படுத்துவார்.
No comments