சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்க திட்டமிட்ட நபர் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட நபரை தேடும் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான பதற்ற நிலையை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments