வடக்கிற்கான புகையிரத சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம்
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாகக் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது தொடருந்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்கக்கூடிய வகையில் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தினூடாக தொடருந்து சேவையை முன்னெடுக்க முடியாது என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் நாளை முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
No comments