தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்.
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் குறித்த வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்றுவருகிறது.
குறிப்பாக மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள்,பொலிசார்,தேர் தல்அலுவலக உத்தியோகத்தர்கள் இன்றையதினம் தமக்கான தபால் வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று காலை 8.30மணிமுதல் வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் குறித்த தரப்பினர் தமது வாக்கினை செலுத்திவருகின்றனர்.
இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 14060பேரின் தபால்வாக்குவிண்ணப்பங்கள்ஏற்று க்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 5942 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4171பேரும், முல்லைத்தீவில்3497,பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Paid Advertisement |
No comments