வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் கௌரவப்பு நிகழ்வு
மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ்தூபியில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன், நான்குமாவீரர்களின் தாயாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உயிர் நீத்த மாவீரர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி ஒளி தீபம் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டது.
நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
No comments