Breaking News

வன்னிதேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு! தெரிவத்தாட்சி அலுவலர்!


எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17தேர்தல்முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். 

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

இதுவரை வன்னி தேர்தல்மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில்  வவுனியாமாவட்டத்தில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் எட்டு முறைப்பாடுகளும்,முல்லைத்தீவில் ஒரு முறைப்பாடுல் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளது. 

அத்துடன் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிப்பதற்காக வன்னிமாவட்டத்தில்387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்தவகையில் வவுனியாவில் 182 மன்னார்98, முல்லைத்தீவில்137 நிலையங்களும் அமைக்கப்படும்.  

இதேவேளை வவுனியாவில் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியும், மன்னார்மாவட்டத்தில் மாவட்டச்செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Paid Advertisement 

இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் 306081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் வவுனியாவில் 128585 பேரும் முல்லைத்தீவில்86889 பேரும் மன்னாரில் 90607பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் என்றார்.

Paid Advertisement 



No comments