Breaking News

வன்னியில் பத்துமணிவரை 22வீதமான வாக்குபதிவு!!


பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. 

அந்தவகையில் வவுனியாவில் காலை10 மணி வரை25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவில் 22.74,மன்னாரில்18.5 வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

அந்தவகையில் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல்மாவட்டத்தில் காலை 10மணிவரை22 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை முதல்மக்கள் ஆர்வத்துடன் தமது ஜனநாயக கடமையினை ஆற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. 

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை6 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார்.

No comments