Breaking News

வன்னிமாவட்டத்தில் 65.5 சதவீத வாக்களிப்பு!!




வன்னி தேர்தல்மாவட்டத்தில் 65.5சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பிஇஏ. சரத்சந்திர தெரிவித்தார்.

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றுகாலை 7மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெற்றது..  


அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் 65.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வவுனியாவில் 63.75 வாக்குகளும்,
முல்லைத்தீவில் 62.45 வாக்குகளும், மன்னாரில்70 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்று முடிந்துள்ளது. 

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை 4.30மணியளவில் தபால் மூலமான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



இதேவேளை வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் மாலை 7மணியளவில்  ஏனைய வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதேவேளை இன்று நள்ளிரவுக்குள் முடிவுகளை அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments