Breaking News

வவுனியாவில் 69 வீடுகள், 46குளங்கள்உடைவு! ஒருவர் மாயம்!


வவுனியாவில் நேற்றிலிருந்து பெய்து வரும் கடும்மழையால் 1048 குடும்பங்களை சேர்ந்த 3492பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

வங்களாவிரிகுடாவில் ஏற்ப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் நேற்றுகாலை முதல்மழை பெய்துவருகிறது,குறிப்பாக நேற்று மாலைநேரத்தின் பின்னர் இடைவிடாத தொடர்சியான கனமழை பெய்தது. இதனால் வவுனியாமாவட்டம் தழுவிய ரீதியில்பாரிய இடர்நிலமை ஏற்றப்பட்டுள்ளதுடன் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்க்கியது.

3492 பேர் நேரடியாக பாதிப்பு

இதேவேளை வெள்ளப்பாதிப்பினால் வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில் 140குடும்பங்களை சேர்ந்த 490பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேசசெயலாளர் பிரிவில் 746குடும்பங்களை சேர்ந்த 2568பேரும் செட்டிகுளம்பிரிவில் 148குடும்பங்களை சேர்ந்த495 பேரும் வவுனியா தெற்குசிங்கள பிரதேசசெயலாளர் பிரிவில் 14குடும்பங்களை சேர்ந்த 39பேரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் 2709 பேர் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர், 126குடும்பங்களை சேர்ந்த363 பேர் 11இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வவுனியாவடக்கில் புளியங்குளம், வவுனியா பிரதேச செயலாளர்பிரிவில் கல்மடு,ஈச்சங்குளம்,பாலமோட்டை, 
வவுனியா தெற்கு சிங்களபிரிவில் அக்கோபுர,புதுவிளாங்குளம,செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவில் கந்தசாமிநகர்,குருக்கள் புதுக்குளம் ஆகிய பகுதிகளைசேர்ந்த பொதுமக்களே இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

69 வீடுகள் சேதம்

இதேவேளை வெள்ளப்பாதிப்பு காரணமாக செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவில்67 வீடுகளும்,சிங்களபிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளுமாக 69 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

46குளங்கள் உடைவு.

இதேவேளை அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் 46குளங்களில் பாரிய உடைவு ஏற்ப்பட்டுள்ளது. 226 குளங்கள் சேதமடையக்கூடிய நிலையில்உள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றை சீரமைக்கின்ற பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில் இராணுவத்தினர் மற்றும் விவசாயிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகரித்த மழைவீழ்ச்சியால் 50 வீதமான நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. அவற்றின் முழுமையான பாதிப்பு தொடர்பாக எதிர்வரும் நாட்களின் பின்னரே கூறமுடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

200ஐ தாண்டிய மழைவீழ்ச்சி

இன்றுகாலை(27) 8மணிவரை கடந்த 24 மணித்தியாலங்களில்208.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை வவுனியா மகாகச்சக்கொடி பகுதியில் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ள 23 வயதான இளைஞர் மாயமாகியுள்ளார். அவரைதேடுவதற்கான நடவடிகைகள் கடந்த பலமணிநேரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

எ9 வீதி முடக்கம்

இதேவேளை நேற்றயதினம் இரவு 10மணியில் இருந்து நொச்சிமோட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தமையால் அந்த வீதியுடனான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை வரையிலும் அந்த நிலமை தொடர்கின்றது.இதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் கனரகவாகனங்களை மாத்திரம் அந்த பாதையினூடாக செல்வதற்கு அனுமதி வழங்கிவருகின்றனர். 

இதேவேளை வவுனியாக்குளம் வான்பாய்ந்து வருவதால் பூந்தோட்டம் பாலத்தினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை பயன்படுத்திவரும் மக்கள் மாற்றுபாதையினூடாக நகருக்கு சென்றுவருகின்றனர். வவுனியா தாண்டிக்குளம் பாலம்பிட்டி பிரதான வீதி, பம்பைமடு ஈச்சங்குளம் வீதிகளில் நீர் மூடி பாய்வதால் அந்த பாதையூடான போக்குவரத்து இன்று மாலை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. 

ஏற்பாடுகள் தயார் நிலையில்

இதேவேளை இன்றயதினம் காலை முதல் மாவட்டம் தழுவியரீதியில் மிதமானமழை பெய்துவருகின்றது.
மழை வீழ்ச்சி அதிகரித்தால் நிலமை மேலும் மோசமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும்,உலர் உணவுகளும் வழங்கும் செயற்பாடுகளில் மாவட்டச்செயலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் அவசர நிலையில் செயற்படுவதற்கு தேவையான அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments