Breaking News

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிப்பு!



தொடர் மழை காரணமாக வவுனியாவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக வவுனியாவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில்  ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும், புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் அதிவேக காற்றின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிப்படைந்ள்ளதுடன், ஒரு வீடும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments