கொடூர இரட்டைக் கொலை! மூவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் நேற்று முன்தினம் (30) கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன், மனைவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகிய கணவன் மனைவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் பருத்தித்துறை காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களில் இருவரை நேற்று முன்தினம் இரவும் (30), ஒருவரை நேற்றும் (31) பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட அடிப்படையில் அவர்களை தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025ம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை குறித்த தம்பதி பெற்றதனாலேயே இரட்டைக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Paid Advertisement |
No comments