வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞன் மாயம்
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞனை காணவில்லை மாமடுவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார். இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிசாருக்கும் தகவல் வழங்கினர். எனினும் இளைஞன் இது வரை கண்டுபிடிக்கபபடவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்த ஹசன் குணவர்த்தன என்ற இளைஞரே காணாமல் போனவர் ஆவார். குறித்த இளைஞனை தேடும் பணி தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments