Breaking News

இன்று பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு மீதான விசாரணை


இலங்கையின் பொதுத்தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றில் இன்றைய தினம் (04) விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த அடிப்படை உரிமை மனு சிவில் அமைப்பு ஒன்றினால் உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Paid Ad

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு  சார்பாகச் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளது. அதன்படி, பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்திருந்திருந்தது.

இலங்கையின் பொதுத்தேர்தல் எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Paid Ad


No comments