அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த மூன்றாம் உலகப்போர்! அதிரடி கொடுத்த உக்ரைன் தளபதி
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் தீவிரமடையும் நிலையில், மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட்டதாக உக்ரைன் ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை உக்ரைன் ராணுவத்தின் முன்னாள் தளபதியான வேலரி செலூஸ்னி என்பவரே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “ உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தற்போது இரு நாடுகளுக்கு என்ற நிலையியை விட்டு விலகி மூன்றாம் உலகப்போர் என்னும் நிலையை அடைந்துவிட்டது.
காரணம், உக்ரைன் போரில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா என்னும் இரண்டு வல்லரசு நாடுகளின் நேரடி தலையீடு அதை உறுதி செய்கிறது.
இந்நிலையில், பிற உலக நாடுகளான வடகொரியா, ஈரான் மற்றும் குறிப்பாக சீனா போன்ற நாடுகளின் தலையீட்டினால் அது உக்ரைனுடனான போர் என்ற நிலையைத் தாண்டி பெரிய போராக மாறியுள்ளது.
உக்ரைன் போரில் வடகொரிய வீரர்கள், ஈரானுடைய ட்ரோன்கள், வடகொரிய மற்றும் சீன ஆயுதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில், இந்த போர் சர்வதேச போராகிவிட்டது.
எனவே, 2024ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகிவிட்டது என்பதை உறுதியாக நம்பலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
No comments