ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத சம்பளம் : வெடித்தது புதிய சர்ச்சை
இன்று வவுனியாவிலுள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுயேட்சை குழுவின் வேட்பாளர் பிரகலாதன் டானியல் தயாளன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .
எமது கட்சியில் இருந்து பிரிந்து ஒட்டுக்குழுவுடன் இணைந்து கொண்ட ஸ்ரீபாலன் ஜென்சி அவர்கள் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது எமது சுயேற்சைக் குழுவின் முதன்மை வேட்பாளருக்கும் ஏனையவர்களுக்கும் புலம்பெயர் தேசங்களில் இருந்து பெருந்தொகையான நிதி பரிமாறப்படுவதாக பல்வேறு விதமான குற்றத்தினை சுமத்தி இருந்தார். இக் குற்றச் சாட்டினை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம்.
இவ் ஊடக சந்திப்பினை எமது முதன்மை வேட்பாளர் உட்பட எட்டு வேட்பாளர்கள் இணைந்தே நடத்துகின்றோம். குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து எமக்கு பெருந்தொகையான நிதி கிடைக்கப்பெறுகின்றது எனின் ஏன் அவர் எங்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும். ஒட்டுக் குழுவுடன் இணைந்து கொண்டு எமது மக்களினுடைய வாக்குகளை சிதறடிக்கின்ற சக்திகளுக்கு துணை போகின்ற இவ்வாறானவர்களிற்கு மக்கள் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
மேலும் பணம் விடயம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவித்திருந்தார் எங்களது சொந்த பணத்தின் ஊடாகவே நாங்கள் இம்முறை தேர்தலில் ஈடுபட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையிலே எங்களை குற்றம் சாட்டியவர்தான் பல இலட்சம் ரூபாவிற்கு விலைபோயுள்ளார். அவர்களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டுதான் அக்கட்சியுடன் இணைந்து இருக்கின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இவ்வாறான ஈனச் செயலாளானது மாவீரர்களையும் ஏனைய போராளிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் செயலாகவே நாம் பார்க்கின்றோம் என தெரிவித்தார்.
No comments