Breaking News

மன்னார் வைத்தியசாலையில் மரணமான இளம் தாயாரின் வீட்டிற்கு சென்ற எம். பி



அண்மையில் மன்னார் வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக சென்ற இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

குறித்த தாயார் மற்றும் சிசுவின் குடும்பத்தினரை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் இன்று (23.11.2024) மன்னாரில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பில் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.


No comments