புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமானது.
அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.
கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
பொது நிர்வாக, மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சராக சந்தன அபேரத்ன மற்றும் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக ஹர்சன நாணயக்கார பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
No comments