Breaking News

சொர்க்கவாசல் விமர்சனம்: சிறைக் கைதியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு கவனம் பெற்றதா?

 


சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நடராஜன், சானியா ஐய்யப்பன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சொர்க்கவாசல் திரைப்படம் எப்படி இருக்கிறது?

இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார், செல்வா ஆர்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சொர்க்கவாசல் படத்தின் கதை என்ன?

கடந்த 1999ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்படுகிறார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சொர்க்கவாசல் படத்தின் கதை அமைந்துள்ளது.

கடந்த 1999இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நடக்கும் கலவரம், அதன் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்படும் ஆணையத்தின் விசாரணை, என திரைக்கதை விளக்கப்படுகிறது.

கதாநாயகன் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி) செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலைக்குச் செல்கிறார். அவரை சிறைச்சாலை மிகவும் சோதிக்கிறது. மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ரவுடியான சிகா (செல்வராகவன்). சிறைச்சாலையைக் கட்டுப்படுத்தும் ரவுடியாக வலம் வருகிறார்.

இவருக்கும் புதிதாக வரும் ஜெயிலருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜெயிலர் சிகாவை கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

இதற்கிடையேதான் சிறைக்கு வரக் காரணம் சிகாதான் என அறிந்த பார்த்திபன், சிகாவை எதிர்க்க முடியாமல் தனது இயலாமையை வெளிப்படுத்துகிறான்.

இந்த நேரத்தில், சிறையில் ஒருநாள் கலவரம் வெடிக்க, அதனால் நடந்த கொலை. இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.


No comments