Breaking News

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் வவுனியாவில் திறப்பு!




தேசியமக்கள் சக்தியின் வன்னிமாவட்ட தலைமை அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா கித்துள் வீதியில் குறித்த அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. 


நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலிசமரசிங்க, மற்றும்பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோரால் குறித்த அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து பாராறுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.



No comments