தேசிய சொட்டோக்கான் கராத்தே சுற்றுப்போட்டியில் சாதித்த வவுனியா வீரர்கள்
தேசிய சொட்டோக்கான் கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியா நிப்போன் கராத்தே சம்மேளத்தினைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள்
அ.ம.பவ்லா றெஜீனா - காட்டா முதலாம் இடத்தினையும், குமித்தே - இரண்டாம் இடத்தினையும்,
ஜெ. துசாந்தன் குமித்தேயில் மூன்றாம் இடத்தினையும் பெற்று வவுனியா மண்ணிற்கும் பெருமையை சேர்த்துள்ளனர்.
குறித்த போட்டியானது கொழும்பு சுகதாசா உள்ளக விளையாட்டரங்கில் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டிருந்தது.
மேலும் குறித்த தேசிய சொட்டோக்கான் சுற்றுப்போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற வீர வீராங்கனைகள் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 14 ம் சைலன்ட் நைட் கராத்தே சுற்றுப் போட்டியில் தெரிவாகியுள்ளனர்.
இவ் வீரர்கள் இப் போட்டிக்காக அடுத்த 3 மாதங்கள் தேசிய பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றவிக்கப்படுவதுடன், இதன்மூலமாக எமது நாட்டு சொட்டோக்கான் குழுவினரை சர்வதேச ரீதியில் கராத்தே சுற்றுப்போட்டிகளில் பங்குகொள்வதற்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments