Breaking News

தனிமனித பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும்: எமில்காந்தன்


தனிமனித பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கோடாரி சின்ன முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்


முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் இன்று கோடாரி சின்னத்தில் இலக்கம் 3 இல் இல் போட்டியிடும் கணேசன் ஜீவப்பிரவு அவர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மக்கள் யுத்ததத்தால் பாதிக்கப்பட்டு தமது பொருளாதாரத்தை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அவர்களது இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், அரசியல் வியாபாரமும் இடம்பெற்றுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

தனிமனித பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலம் மக்கள் தமது அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும். தமது இனத்தின் அடையாளத்தை காப்பாற்ற முடியும். கடந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து இம்முறை தேர்தலின் போது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

தனிமனித பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களின் அரசியல் இருப்பை தக்க வைகக்க கூடிய திட்டங்களுடன் உங்கள் முன் வாக்கு கேட்டு வருபவர்களை நீங்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அது நிச்சமாக போரால் பாதிக்கப்பட்ட இந்த மண்ணில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வன்னி மக்களுக்கும் புதியவர்கள் வர வேண்மும் என சிந்திக்கிறார்கள். இன்று பலர் புதியவர்களாக களமிறங்கியுள்ளார்கள். இவர்களில் நடைமுறைச் சாத்தியபான இவ் விடயங்களை மக்கள் நலன் சார்ந்து செய்யக் கூடியவர்கள் யார் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கோடாரி சின்னத்திற் இரவு வேளையிலும் நீங்கள் திரண்டு வந்து வழங்கும் ஆதரவுக்கு தலை வணங்குகின்றோம். நவம்பர் 14 ஆம் திகதி இங்கு அலையென திரண்டது போல் உங்கள் வாக்கு என்னும் துருப்பு சீட்டை கோடாரி சின்னத்திற்கு செலுத்தி உங்களில் ஒருவனாக எம்மை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள்.

நிச்சயமாக எமது அணியில் இருந்து இம்முறை வன்னியில் இருவர் பாராளுமன்றம் செல்வார்கள் என நினைக்கின்றோம். அந்த நம்பிக்கையை மக்கள் தந்துள்ளார்கள். அதில் நீங்களும் பங்காளராக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார். 



No comments