இடியுடன் கூடிய கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், சில இடங்களில் ஐம்பது மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
அத்தோடு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Paid Ad |
No comments