Breaking News

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை



சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.எம.சிப்லி மற்றும் செயலாளர் யு.உபைதுல்லா ஆகியோர் இணைந்து குறித்த கோரிக்கை கடிதத்தை வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடம் இன்று (26.11) கையளித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுளளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதுடன், அவர்களும் மழைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதனால் ஏனைய மாவட்டங்களில் விடுமுறை வழங்கியது போன்று வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். 

No comments