எமக்காக குரல் கொடுக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் - புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி தலைவர்
எமக்காக குரல் கொடுக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா தெரிவித்தார்.
இன்று வவுனியா வெளிக்குளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்,
மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைக்காக போராடிய அனைத்து போராளிகளுக்கும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் கட்சியாகிய நாம் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கின்றோம். குறிப்பாக இச்சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளாகிய நாங்கள் பாராளுமன்றம் செல்ல முடியாது.
புனர்வாழ்வுக்கு வழங்கப்பட்ட 12 ஆயிரம் போராளிகளின் குடும்பங்கள் வாக்களிக்கும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் சார்பாக பாராளுமன்றத்துக்கு நாம் செல்ல முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதற்குக் காரணம் மக்களுக்காக ஆயுதமேந்தி போராடிய போராளிகள் என்பதால் ஆகும்.
குறிப்பாக ஆயுதமேந்திய பரப்பினர் அனைவருமே தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிததிருந்தனர்.
ஆனால் விடுதலைப்புலிகள் மட்டும் தன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை இந்நிலையிலே 12 ஆயிரம் போராளிகளும் அவர்கள் குடும்பம் வாக்களிக்கும் போது மக்களின் உரிமை மற்றும் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்களின் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். இதற்கு முக்கியமாக எமக்கு அரசியல் பலம் வேண்டும் அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
குறிப்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஸ்தான் ஒரு கூட்டத்தின் போது தமிழ் மக்களின் வாக்குகளை உணவுப்பொதியையும், மது போத்தலினையும் வழங்கி மிகச் சாதாரணமாக தன்னால் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். இதை பார்க்கும்பொழுது 40 ஆயிரம் போராளிகளை விதைத்தமை மற்றும் 3 லட்சம் மக்களை இழந்தமையும் இவ்வாறானதொரு விடயத்திற்காகவா? வாக்குப் பெறுவது என்பது வேறு விடயம் ஆனால் இவ்வாறான விடயத்தை கூறுவதன் மூலம் எமது மக்கள் எவ்வாறான நிலையில் உள்ளனர் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.
எனவே எமது மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்காக விடுதலைப்புலிகளாகிய நாங்கள் ஜனநாயக ரீதியிலான ஆயுதத்தினை தூக்கி உள்ளோம். குறிப்பாக கடந்த 15 வருடமாக நாங்கள் பொறுமையை காத்திருந்தோம்.
அவ்வாறான நிலையில் நீங்கள் வேறு ஒருவருக்கு வாக்களிக்க விரும்பினால் ஏதோ ஒரு வகையில் குரல் கொடுக்கக்கூடிய தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
இதை விடுத்து எம்மை இழிவாக கூறுபவரிடம் எங்கள் வாக்குகளை வழங்கி சிதறடிக்க வேண்டாம்.
No comments