பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மூவர் விடுவிப்பு!! - மேல்நீதிமன்றநீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பு!!
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்றுவிடுவிக்கப்பட்டனர்.
வவுனியா பெரியபுளியாங்குளத்தை செர்ந்த, சிறிசுப்பிரமணியம் கிரிசா,கந்தப்பு கயேந்திரன், பூந்தோட்டத்தை சேர்ந்த காகைசிங்கம் காந்தரூபன், ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2019 ஆண்டு தைமாதம் சாளம்பைக்குளம் பகுதியில் தீங்குவிளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர். பொலிஸ்விசாரணையின் அடிப்படையில் பி அறிக்கை தயார்செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில்அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த எதிரிகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996ஆண்டின் 18ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம்2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் எம்பிக்க தவறியமையால் சட்டவிதிகளின் வழக்கத்தில் வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.
குறித்த வழக்கில் இரசாயனபகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் வழக்கு தொடுனரினால்சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் எம்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதுடன்,
அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால்
தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் பிரிவு 134இன் சான்று கட்டளைசட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு எதிரிகளான குறித்த மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
Paid Ad |
No comments