வவுனியா குடாகச்சக்கொடி வயல்வெளியில் வீழ்ந்து கிடந்த யானை
வவுனியா, குடாகச்சக்கொடி வயல்வெளியில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்து கிடந்த யானை ஒன்றினை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த யானை மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த யானை எட்டு வயது மதிக்கத்தக்கது எனவும் தெரிவித்ததோடு, மோசமான காலநிலை காரணமாக உணவு தேடிச் சென்ற வேளையில் வயல்களில் தவறி விழுந்துள்ளதாகவும், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த யானைக்கான சிகிச்சைக்காக நாளை கால்நடை வைத்திய அதிகாரி வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments