மன்னார் வைத்தியசாலை சம்பவம் தாெடர்பில் நீதியான விசாரணையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்: எமில்காந்தன்
மன்னார் வைத்தியசாலை சம்பவம் தாெடர்பில் நீதியான விசாரணையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலையில் தாயும் சிசுவும் மரணமடைந்த சம்பவம் தாெடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில்.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் வைத்தியசாலையில் தாயும் சிசுவும் மரணமடைந்த சம்பவமானது மக்களுக்கு வைத்தியத்துறை மீது அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாது. ஆனாலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தவறு செய்தவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஊழல் மாேசடிகளை ஒழிப்பதாக நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கம் இச் சம்பவம் தாெடர்பில் விசாரணை விரைஈந்து நடத்தி நியாயமான தீர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக் காெடுக்க வேண்டும்.
கடந்ந காலங்கள் பாேல் அல்லாது நீதியான விசாரணை இடம்பெற வேண்டும். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களுடன் இணைந்து நாமும் நீதிக்காக குரல் காெடுக்க வேண்டி வரும் எனவவும் தெரிவித்துள்ளார்
No comments