Breaking News

தமிழ்மக்களின் வாக்குகளை நுட்பமாக வேட்டையாடும் முஸ்லீம் தலைமைகள்!! எச்சரிக்கை விடுத்த எமில்காந்தன் !


தமிழ்வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லீம் வேட்பாளர்களை உள்நுளைத்து தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் தமிழ்மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

வன்னியில் கடுமையான ஒரு போட்டி நிலவுகின்ற இந்த நேரத்தில் தமிழ்மக்களிடம் நாங்கள் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். கடந்த 15 வருடகால அரசியலில் தமிழர்களின் உரிமைக்காக அரசியல் செய்துவந்த கட்சிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரத்திற்கும் பதவிகளுக்கும் போட்டியிட்டு தமிழ்மக்களை தலைமையற்ற சமூகமாக நடுத்தெருவில் விட்டுச்சென்றுள்ளனர். 

அந்த அதிகாரபோட்டியில் இரண்டாக பிரிந்து இண்டுக்கும் தலைமை இல்லாமல் மக்களை பிழையாக வழிநாடத்திவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். விசேடமாக வன்னி மாவட்டத்தில் இந்த15 வருட அரசியலில் முஸ்லீம் அரசியல்வாதிகள் களநிலவரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிலைமை இருந்துள்ளதை பார்க்கின்றோம்.

தமிழ்மக்களை விட குறைவான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம்கள் தமது அரசியல் தேவையை தமிழ் மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக்கொள்கின்றனர். இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் புதியவியூகங்களை அமைத்து தமிழ் வேட்பாளர்களை உள்வாங்கி தமது வாக்குவேட்டையினை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். 
தமிழ்வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லீம் வேட்பாளர்களை உள்நுளைத்து தமிழ் வாக்குகளை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

தமிழர்கள் எந்தவகையில் வாக்களித்தாலும் முஸ்லீம்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்பும் நோக்குடன் கட்சிதமாக அவர்கள் செயலாற்றிவருகின்றனர். 

எனவே தமிழ்மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க போகின்றீர்கள் அது எத்தகைய வேட்பாளர்களை கொண்டுள்ளது. அதில் தமிழர்கள் முற்று முழுதாக உள்ளார்களா. அவர்கள் புதிய முகங்களா அனுபவம் ஆற்றல் உள்ளவர்களா என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்களது கொள்கையும் சித்தாந்தமும் மிக முக்கியமானது. சிலர் பழைய சித்தாந்தங்களுடன் புதியமுகங்களைகாட்டி வாக்குகேட்டு வந்துள்ளனர்.

No comments