Breaking News

வவுனியா கனகராயன்குளம் பெரியார்குளததில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

 
வவுனியா கனகராயன்குளம் பெரியார்குளம் பகுதியில் மாவீரர் வாரத்தையொட்டிய மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், தீபங்கள் ஏற்றி அகவணக்க மரியாதையும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், சமூக ஆர்வலர் தே.சிவானந்தராசா (ஜெகன்), கட்சியின் மாவட்ட செயலாளர் ந.கருணாநிதி, உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன்,  முன்னாள் வடக்கு பிரதேசசபை தவிசாளர் ச.தணிகாசலம், சமூக ஆர்வலர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



No comments