Breaking News

வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை- அரச அதிபர்

 

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனயா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

No comments