Breaking News

வவுனியா ராமயன்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்



வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம் குளம் உடைபடுக்கும் அபாயம் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதி கம நல சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விவசாயிகள் உடனடியாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

100 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலத்தை கொண்ட ராமயன்குளம் அதிகளவான மழை வீழ்ச்சியின் காரணமாக உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

எனவே இப் பேரிடரை தடுக்கும் முகமாக விவசாயிகளினால் மண் மூடைகள் அடுக்கி முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


No comments