Breaking News

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 10 ஆம் திகதி முதல் கனமழை


கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.  பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments