Breaking News

வவுனியாவில் 1387ஏக்கர் நேற்காணிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

வவுனியாவில் அண்மையில் ஏற்ப்பட்ட மழைவெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.


அந்தவகையில் கமநல அபிவிருத்தி நிலையங்களின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 3529.25 ஏக்கர்நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அழிவடைந்த நெற்காணிகள் தொடர்பாக கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள காப்புறுதிச்சபையின் உத்தியோகத்தர்களால் மதீப்பீடு செய்யும் பணிகள் அண்மையநாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

மதிப்பீட்டின் அடிப்படையில்1387.5 ஏக்கர் நேற்காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா 14,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments