Breaking News

14 வயது சிறுமி ஒருவர் கொலை - சந்தேகநபர் கைது


கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட அகரவில பகுதியில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயதான குறித்த சிறுமி கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தாய், நேற்றிரவு கம்பஹா காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

அவர் காணாமல் போன சம்பவத்துடன் தமது இரண்டாவது கணவர் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சிறுமியின் தாய் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த தாயின் இரண்டாவது கணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் வீடொன்றின் மலசலக்கூட குழியில் சிறுமியின் சடலத்தை இட்டு அதனை மூடியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் சிறுமியின் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

No comments