Breaking News

டிக்வெல்லவுக்கு விதிக்கப்பட்ட 3 வருட போட்டித்தடை 3 மாதங்களாகக் குறைப்பு

 

ஊக்கமருந்து தடையை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருடப் போட்டித் தடை மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதியன்று இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் நடத்திய ஊக்கமருந்து சோதனையை அடுத்து அவருக்கு மூன்று ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்துஇ அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அவரது உள்நாட்டு கிரிக்கெட் கழகம் என்பவற்றினால் இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும்இ ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி சமரவீர தலைமையிலான மேன்முறையீட்டுக் குழு நிரோஷன் டிக்வெல்ல உட்கொண்ட பொருளானது அவரது விளையாட்டுத் திறனுடன் தொடர்பில்லாதது மற்றும் போட்டிக்கு வெளியே எடுக்கப்பட்டது எனத் தீர்மானித்தது.

இதன் விளைவாகஇ நிரோஷன் டிக்வெல்லவின் மூன்று வருடப் போட்டித் தடையைக் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மூன்று மாதங்களாகக் குறைப்பதற்கு மேல்முறையீட்டுக் குழு பரிந்துரைத்தது.

இதன்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல தற்போது மீண்டும் உடனடியாக விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.

No comments