7000 மைல் வேகத்தில் சீறி பாயும் ரஷ்யாவின் ஏவுணை : கலக்கத்தில் உலக நாடுகள்
மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா என்ற கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில் கிழக்கு மத்தியதரைக் கடலில் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதை அதன் வடக்கு கடற்படையின் போர்க்கப்பலில் நிறுத்தும் என்று ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
அட்மிரல் கோலோவ்கோ போர்க்கப்பல் சிர்கானுடன் முழு நேரமாக ஆயுதம் ஏந்திய முதல் கப்பல் ஆகும் என்று வடக்கு கடற்படையின் தளபதி அலெக்சாண்டர் மொய்சேவ் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒலியை விட 7இ000 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த உயர் ஏவுகணை புதிய தலைமுறை நிகரற்ற ஆயுத அமைப்புகளின் ஒரு பகுதியென ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவரித்தார்.
No comments