Breaking News

ஏ9 வீதியில் அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments