Breaking News

சுகவீனமடைந்த யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சை!



வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா குடாகச்சக்கொடி வயல்வெளியில் சுகயீனம் காரணமாக வீழ்ந்து கிடந்த யானை ஒன்று  வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் அண்மையில் மீட்கப்பட்டது.  

அதற்கு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எட்டு வயது மதிக்கத்தக்க குறித்த யானை,  மோசமான காலநிலை காரணமாக வயலில் தவறி விழுந்துள்ளதாக
வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி பா.கிரிதரன் அவர்களின் தலைமையில் யானைக்கான சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments