Breaking News

வவுனியாவில் கொலை - ஒருவர் கைது



வவுனியா இளமருதங்குளம் பகுதியில் நேற்று மாலை வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற, சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் பழைய பகை ஒன்றின் காரணமாக ஐந்து பேர் கொண்ட குழு வவுனியாவிலிருந்து இளமருதங்குளம் பகுதிக்குச் சென்று அங்கு வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூமாங்குளத்தை சேர்ந்த வாகன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments