Breaking News

சர்வதேசமட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன்

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றிய வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலய மாணவன் செல்வன் பா.கசிபன் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.

கடந்தவாரம் ருமேனியாவில் இடம்பெற்ற இவ் சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கையில் இருந்து யாழ்ப்பாணம், வவுனியா,கண்டி, களுத்துறை,கொழும்பு போன்ற மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஐம்பது நாடுகளில் இருந்து சுமார் 310 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இவ் ஒலிம்பியாட் போட்டியில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டியதன் மூலம் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலய மாணவன்  வெற்றி பெற்று இப் பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இந் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளான்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இம்மாணவன் இப்போட்டிக்கு சென்றுவருவதில் பொருளாதாரம் ஒரு சவாலாகவே இருந்தது இந்நிலையில் பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் மற்றும் பெற்றோர் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய பழையமாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இலண்டன் கிளைச்சங்கத்தின் அனுசரணையில் இம்மாணவன் போட்டிக்கு ருமேனியா சென்றுவருவதற்காக 730,000 ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது. 

இம் மாணவனை வழிப்படுத்திய பெற்றோர், அதிபர்,ஆசிரியர்களை பாடசாலைச்சமூகம் வாழ்த்திநிற்கின்றது.



No comments