கழுத்தில் பாய்ந்த கூரிய தடி! வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது!
வவுனியா பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்றுகுற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.
குறித்த சத்திரசிகிச்சை நேற்றயதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைமூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.
இவ் வெற்றிகரமான சத்தி்சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவநிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்கமருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து
சத்திரசிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments