Breaking News

வடக்கு மாகாணத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் வவுனியாவும் வடக்கு மாகாணம் என்று உணர்ந்து கடமையாற்ற வேண்டும்! திலகநாதன் எம்.பி

வடக்கு மாகாணத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் வவுனியாவும் வடக்கு மாகாணம் என்று உணர்ந்து கடமையாற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த பாேதே அவர் இவ்வாறு தெ ரிவித்தார். அவர் மே லும் தெ ரிவிக்கை யில்

சூடுவெந்தபுலவு பகுதயில் உள்ள பாடசாலையில் தகவல் தொடர்பாடல பாடம் கற்பித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டு 6 மாதம் கடந்தும் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் அந்த மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படடுள்ளது. 

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்து நாகரிக பாடத்திற்கு ஆசிரியர் இல்லை.  ஏன் அந்த வெற்றிடம் நிரப்பபடவில்லை. வவுனியா தெற்கு வயலயத்தில் 23 கணித ஆசிரியர்கள் பற்றாக்குறை. யாழ்ப்பாண மாவட்டத்தில் 87 கணித ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர். 

வடமாகாணத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் வடக்கு மாகாணம் என்றால் யாழ் மாவட்டம் மட்டும் தான் என்றா நினைக்கிறார்கள். வவுனியாவும் வடக்கு மாகாணம் தான். இனிமேல் இவ்வாறான கூட்டங்களுக்கும் மாகாணப் பணிப்பாளர்களையும் அழைக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இது விளக்கும். 

பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் விபரத்துடன் தாருங்கள். நாம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றுடன் கதைக்கின்றோம். கிராமப்புற பாடசாலைகளில் சில மாணவர்கள் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை எழுத முடியாத நிலையில் உள்ளனர். அடிப்டைக் கல்வி கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

தூர இடங்களில் இருந்தும் வரும் ஆசிரியர்கள் ஒரு பஸ் மாறி வரும் அளவுக்கு தான் இடமாற்றங்களை வழங்குங்கள்.  சில ஆசிரியர்கள் தூர இடங்களுக்கு பஸ்களில் சென்றே கற்பிக்கின்றார்கள். பஸ் தாமதமாக சென்றால் கைவிரல் அடையாளம் வைக்கும் பாேது தாமத வருகையாக அது பதிவாகிறது. இதனால் காலையியலேயே அந்த ஆசிரியர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் எவ்வாறு சிறந்த கல்வியை வழங்க முடியும். ஆகவே தூர இடங்களுக்கு பஸ்சில் சென்று கற்பிக்கும் ஆசிரியர்களின் தாமத வருகையை கணக்கில் எடுக்காத வகையில் மாற்று ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments