வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.
கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சாரகம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார், மற்றயவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி
Reviewed by vavuniyan
on
December 25, 2024
Rating: 5
No comments