Breaking News

வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்

வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மைய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உமாசுகி நடராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments