சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கம் - பிரதமர்
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற அடிப்படையில், பொருளாதாரம், தொழிற்துறை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ்வொரு பிரஜையும் இனம், பாலினம் அல்லது மதம் என்ற பேதங்களைக் கடந்து அமைதியான, சுதந்திரமான, கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். கிடைத்துள்ள சந்தர்ப்பங்களைத் தவறவிடாது அவற்றைப் பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவேண்டும் எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments