ஏ-09 வீதியில் விபத்து : ஒருவர் பலி
கிளிநொச்சி ஏ-09 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
கந்தசாமி கோவிலடியில் வீதியை கடக்க முற்பட்ட போது யாழ்.பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் மோதி பலியாகியுள்ளார்.
விபத்தில் 75 வயதுடைய யோகலிங்கம் குமரேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments