வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 16.817 மில்லியன் ரூபா நட்ட ஈடு - கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவிப்பு
கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நட்டஈடு இன்றையதினம் கமநல காப்புறுதி சபையின் ஊடாக பொலன்னறுவை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
குறித்த நட்டஈடானது அடுத்த மாதம் 1ம் வாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 1160 ஏக்கர் அழிவடைந்துள்ளதாகவும், அதற்கான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
No comments